Thursday, April 18, 2024 8:52 am

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித் !! ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் பல்வேறு செயல்களில் முயற்சி செய்வதில் பெயர் பெற்றவர். பைக் சவாரி தவிர அவரது இதயத்திற்கு நெருக்கமான ஒரு செயல்பாடு துப்பாக்கி சுடுதல் ஆகும், இதற்காக ‘வலிமை’ நடிகர் கடந்த காலத்தில் பரிசுகளை வென்றுள்ளார். இன்று திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற அஜித், ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆறு பதக்கங்களை வென்ற அஜித், இந்த ஆண்டு போட்டிக்கு தயாராகி வருவது போல் தெரிகிறது, மேலும் அவர் மீண்டும் பெரிய அளவில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நடிகர் எந்த முயற்சியை எல்லாம் எடுக்கக் கூடாதோ, அதையெல்லாம் அடுத்தடுத்து எடுப்பவர். ரசிகர்கள் தான், ஒரு ஹீரோவுக்கு பலம் என்பார்கள். அந்த ரசிகர் மன்றத்தையே வேண்டாம் என கலைத்தவர் அஜித்,

2011 மே 1 ம் தேதி அஜித் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது, ஏப்ரல் 29 ம் தேதி அஜித் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தனது 40 வது பிறந்தநாளில் அஜித் எடுத்த இந்த முடிவு, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. ‘எப்படி இப்படி ஒரு முடிவை அஜித் எடுத்தார்?’ என்று அனைவரும் முனுமுனுத்தனர். ஆனால், அஜித் ஒரு முடிவை எளிதில் எடுப்பவர் அல்ல;

எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குபவரும் அல்ல. இன்று வரை ரசிகர் மன்றங்கள் இல்லாத ஒரே மாஸ் ஹீரோ, அவர் மட்டுமே.

மங்காத்தா சூட்டிங் தந்த அனுபவம்!

அஜித்தின் இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் தான், மங்காத்தா படத்தின் படபிடிப்பு உச்சத்தில் இருந்தது. முழுக்க மும்பையில் தான், ஷூட்டிங் நடந்தது. 2011 ஏப்ரல் 29 ம் தேதி அஜித் இந்த முடிவை எடுப்பதற்கு, 2011 ஏப்ரல் 18 ம் தேதி நடந்த ஒரு சம்பவம் தான் காரணம்.

மும்பையில் மங்காத்தா சூட்டிங் சூடாக நடந்து கொண்டிருந்த போது, அஜித் அங்கு இருப்பதை கண்டு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் சூட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதியும் பரபரப்பானது. இதை அஜித் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு , அஜித் எப்போது ரசிகர்களை சந்தித்தார் என்கிற கேள்விக்கு, பதிலும் இல்லை. வேறு வழியே இல்லை…. ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

யாரும் ஒருங்கிணைக்காமல் குவிந்த அந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அஜித், கட்டடத்தின் மீது ஏறி, கைகளை அசைத்து, முத்தம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இரவு வரை விடாமல் காத்திருந்த ரசிகர்களை, அவரும் ஏமாற்றாம்ல், வெளியே வந்து உற்சாகப்படுத்தி, பலத்த பாதுகாப்புக்கு இடையே அங்கிருந்து புறப்பட்டார். இது 11 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ரசிகர்கள் சந்திப்பு. அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும் என்பதும் தெரியாது. அதை அறிந்தவர் அஜித் மட்டுமே. வெளியே செல்லும் போது, அங்கிங்குமாய் ஒருவர் இருவரை சந்திப்பது என்பது வேறு; ஒருவருக்காக ஒரு கூட்டமே கூடி, அவர்களை சந்திப்பது என்பது வேறு. மங்காத்தா படப்பிடிப்பிற்கு பின், திருச்சியில் நடந்தது அது தான்!

- Advertisement -

சமீபத்திய கதைகள்