47வது மாநில படப்பிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘AK61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து மிரட்டியிருந்த படம் விக்ரம் வேதா.இந்தப் படத்தை புஷ்கர் -காயத்ரி இயக்கியிருந்தனர்.இருவேறு துருவங்களாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை தற்போது பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகானை வைத்து ரீமேக் செய்துள்ளனர்.
இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து வ -குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா படங்களை இயக்கியுள்ளனர். இதில் விக்ரம் வேதா மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மிரட்டலான திரைக்கதையுடன் இந்தப்படம் ரசிகர்களை மிரட்டியது.
குறிப்பாக படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்த விஜய் சேதுபதி மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மாதவன் இருவருக்கும் படத்தில் வெயிட்டான ரோல் காணப்பட்டது. அவர்களும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, தமிழின் மிக முக்கியமான படமாக விக்ரம் வேதா படத்தை மாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தை தற்போது பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகானை வைத்து எடுத்து முடித்துள்ளனர் புஷ்கர் -காயத்ரி. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. விக்ரம் வேதா படம் கொடுத்த மிரட்டல் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது திரைக்கதையில் சுழல் என்ற வெப் தொடர் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த தொடர் அமேசான் ப்ரைமில் வெளியானது.
புஷ்கர் மற்றும் காயத்ரி தங்களது சமீபத்திய பேட்டியில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் புஷ்கர் -காயத்ரி பகிர்ந்துக் கொண்டனர். அப்போது அஜித்துடன் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்கள், அந்தப் படத்திற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்துவரும் அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக புஷ்கர் காயத்ரி படத்தில் அவர் இணைவாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதை புஷ்கர் -காயத்ரி உறுதிப்படுத்தியுள்ளது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.