அஜித் படத்திற்காக பிரபல மலையாள படத்திலிருந்து நடிகை மஞ்சு வாரியர் விலகல் !! வைரலாகும் தகவல்

0
அஜித் படத்திற்காக பிரபல மலையாள  படத்திலிருந்து நடிகை மஞ்சு வாரியர் விலகல் !! வைரலாகும் தகவல்

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்திற்காக அவர் பிரித்விராஜ் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

கடுவா படத்தை அடுத்து பிரித்விராஜ் மீண்டும் இயக்குனர் ஷஜி கைலாஷ் உடன் காபா என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஆசிப் அலி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதலில் இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அஜித் படத்தில் நடித்து வருவதால் நாட்கள் ஒதுக்குவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் ப்ரித்விராஜின் காபா படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பிரபல நாவலாசிரியர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘சங்குமுகி’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘காபா’ உருவாகிறது. பிருத்விராஜ் இந்தப் படத்தில் கோட்ட மது என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

No posts to display