தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பெறுவதற்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிற நடிகர்களில் ஒருவர் நடிகர் சிபிராஜ். நடிகர் சத்யராஜ் மகனாக அறிமுகமாகிய சிபிராஜ் சமீபத்தில் மாயோன் படத்தில் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றார்.
அதனை தொடர்ந்து தற்போது வட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, பால சரவணன், சைத்ரா ரெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதிலும் நடிகை ஆண்டிரியாவின் நடிப்பு மற்றும் கெட்ட வார்த்தையில் பேசும் விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான போல்ட்டான காட்சியில் ஆண்ட்ரியா நடிப்பது புதிதல்ல.