மீண்டும் சமூக பிரச்னையை கையில் எடுக்கும் அஜித் !!! வைரலாகும் தகவல் இதோ !!

0
மீண்டும் சமூக பிரச்னையை கையில் எடுக்கும் அஜித் !!! வைரலாகும் தகவல் இதோ !!

அதேபோல் அஜித்தும் சுதா கொங்கராவும் ஒரு படத்தில் இணையும் வாய்ப்பு அதிகம் என்றும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்றும் ஜிவிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித்.இதில் அஜித் இரண்டு விதமான கெட்அப்களில் நடிக்கிறார்.

வலிமை படத்தில் போதைப் பொருள் கடத்தல், அதற்காக வழிப்பறி செய்ய வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதை படமாக காட்டினார். தற்போது ஏகே 61 படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையை படமாக்கி வருகிறார்.

அஜித் ஏகே 61 படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக தான் நீண்ட தாடியுடன் இருக்கும் வயதான தோற்றத்தில் அஜித் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஏகே 61 படத்தின் ஷுட்டிங் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், விரைவில் ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் புனேயில் துவங்கப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஷுட்டிங் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு ஆகஸ்ட் 13 ம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்தநாளன்று ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட போனி கபூர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏகே 62 ரெடியாக போகிறது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தை முடித்த பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை விக்னேஷ் சிவன் ஏற்கனவே துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் அஜித்சினிமாவிற்கு வந்தது முதல், ஒரு படத்தை முடித்த பிறகு அடுத்த படம் பற்றிய பேச்சை துவக்குவதையே கொள்கையாக வைத்திருக்கும் அஜித், தற்போது தனது கொள்கையை தளர்த்தி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் அஜித். ஏகே 61 ஷுட்டிங் முடிப்பதற்கு முன்பே ஏகே 62 படத்தில் கமிட்டாகி விட்டார் அஜித். இதனால் இந்த படங்களைத் தொடர்ந்து அஜித்தை அடுத்து இயக்க போகிறவர் யார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அஜித்தை அடுத்து இயக்க போவது இவராஇந்த சமயத்தில் அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த சுதா கொங்கராவிடம், அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுதா கொங்கரா, பண்ணலாம். ஒவ்வொன்றாக பண்ணலாம். ஒரு படம் முடிக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு படத்தை முடித்த பிறகு தான் மற்றொரு படத்தை துவக்க முடியும் என்றார்.

அப்போ அது உண்மை தானாஇதனால் சுதா கொங்கரா, அஜித்தை இயக்க போகிறார் என்ற தகவல் உண்மை தான் என தெரிகிறது. தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா, இதற்கு பிறகு கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போவதாகவும், இதில் லீட் ரோலில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனா இவர் ஏன் இப்படி சொன்னார்இதே போல் சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக பல மாதங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இதுவும் பயோபிக் படம் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் சூர்யா தற்போது நடிக்கும் வணங்கான், வாடிவாசல், சூர்யா 42 படங்களை முடித்த பிறகு அடுத்த ஆண்டில் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.ஆனால் ஒரு படத்தை முடிக்க 3 ஆண்டுகள் தேவைப்படுவதாக அவரே சொல்வதால் அஜித், சூர்யாவுடனான படங்களை எப்போது எடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

No posts to display