இணையத்தில் படு வைரலாகும் அஜித் 61 படத்தின் பட பிடிப்புதள புகைப்படம் !!

0
இணையத்தில் படு வைரலாகும் அஜித் 61 படத்தின் பட பிடிப்புதள புகைப்படம் !!

அஜீத் குமாரின் திருட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ஏகே 61’ கோலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இன்னும் நாற்பது சதவிகிதம் மட்டுமே முடிவடைய உள்ளது. அஜீத் தனது நீண்ட ஐரோப்பிய விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்பினார், விரைவில் படத்திற்கான தனது வேலையைத் தொடங்குகிறார்.வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக அஜித் நீண்ட தாடியெல்லாம் வளர்ந்து வலம் வந்தார். இப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என அஜித்தும், ஹெச்.வினோத்தும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக சென்னை அண்ணாசாலையில் செயல்படும் ஒரு வங்கி போல பிரம்மாண்ட செட் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த செட்டியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

No posts to display