Thursday, December 7, 2023 8:51 am

AK61 பட பிடிப்பு தளத்தில் வெளியான புதிய புகைப்படம் !! செம்ம வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித் கடந்த மாதம் ஐரோப்பாவிற்கு சாலை பயணம் மேற்கொண்டார். லண்டனில் நடிகர் தனது நண்பர்களுடன் பைக்கில் செல்லும் படங்கள்; மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாரிஸில் அவர் மேற்கொண்ட பயணம் இணையத்தில் புயலை கிளப்பியது. ஐரோப்பாவிற்கு ஒரு மாத விடுமுறைக்கு பிறகு நடிகர் தற்போது பத்திரமாக சென்னை திரும்பியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியருடன் நடிகை பூஜா இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நடிகை பூஜாவின் குழந்தை தான் என்னை அறிந்தால் படத்தில் ஒரு வயது குழந்தை ஈஷாவாக நடித்தது.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்