மாரடைப்பால் பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் !! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்

0
மாரடைப்பால் பிரபல நகைச்சுவை நடிகர்  திடீர் மரணம் !! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஒருவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

41 வயதான நடிகர் தீபேஷ் பன், ‘பாபிஜி கர் பர் ஹெய்ன்’ என்ற இந்தி சீரியலில் மல்கான் சிங்காக தனது அற்புதமான நடிப்பின் மூலம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

இவர் கடந்த 23ஆம் தேதி காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன் அடித்த பந்தை குனிந்த எடுக்க முயற்சித்து தவறுதலாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தீபேஷ் கீழே விழுந்து ஆதி பட்டதில் சுயநினைவு இல்லாத காரணத்தால்​​அவரது நண்பர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இறப்பிற்கு மூளையில் ரத்தக்கசிவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

No posts to display