அஜித் படம் குறித்து சுதா கொங்கரா கூறிய மாஸ் தகவல் இதோ !!!

0
அஜித் படம் குறித்து சுதா கொங்கரா கூறிய மாஸ் தகவல் இதோ !!!

தமிழ் சினிமாவில் சூரரைபோற்று, இறுதி சுற்று என அருமையான கதைக்களத்தை கொண்ட படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இதில் சூரரைப்போற்று படத்தின் திரைக்கதைக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதனையடுத்து, தற்போது பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் வைத்து சூரரைப்போற்று ஹிந்தி ரிமேக்கை இயக்கி வருகிறார்.

வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வரும் சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கதையை சுதா கொங்கரா அஜித்திடம் கூற, இருவரும் இணைந்து ஒரு படம் பன்னவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இதனை பார்த்த அஜித் ரசிகர்களுக்கு இருவரும் இணைந்து எப்போது படம் பண்ணுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால், சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் ஒரு கேங் ஸ்டார் படத்தில் நடித்தால், அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

ஆனால், இந்த படம் நடக்குமா..? இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தற்போது இருக்கிறார்கள். இதனையடுத்து, சமீபத்தில் சுதா கொங்கராவிடம் இது குறித்து கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த அவர். ” கொஞ்சம் பொறுமையா இருங்கங்க.. கண்டிப்பா படம் பண்ணலாம், ஒரு படத்தை எனக்கு எடுத்து முடிக்கவே 3 வருஷம் ஆகுது. ஒரு ஒரு படமாக எடுக்க நேரம் ஆகிறது. அதனால, ஒரு படத்தை முடிச்ச பிறகு அடுத்த படத்தை பற்றி சொல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

No posts to display