தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தினை தொடர்ந்து பலே பாண்டியன், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், காடன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தார்.
ரஜினி நட்ராஜ் என்பவரை 2010ல் திருமணம் செய்து கொண்ட விஷ்ணு, ஒரு மகன் இருக்கும் நிலையில் 8 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்தானதற்கு பிரபல மேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் காரணம் என்று முன்னாள் மனைவி கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஜுவாலா கட்டாவை 2021ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் தற்போது அதிர்ச்சிக்குரிய ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆடையில்லாமல் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் அதிரவைத்தார். அவரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் படுக்கையில் படுத்தபடி, துணி எதுவும் போடாமல் போர்வையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தினை எடுத்தது என் மனைவி ஜுவாலா கட்டா தான் என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Well… joining the trend !
P.S
Also when wife @Guttajwala turns photographer… pic.twitter.com/kcvxYC40RU— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022