உண்மையிலேயே திருச்சி சமயபுரம் கோவிலுக்கு வந்தாரா அஜித் !! நீங்களே பாருங்க

0
உண்மையிலேயே திருச்சி  சமயபுரம் கோவிலுக்கு  வந்தாரா அஜித் !! நீங்களே பாருங்க

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜீத்குமாரை காண வந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்த நடிகை யாஷிகா ஆனந்த்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி நேற்று மாலை சமயபுரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடிகர் அஜீத்குமார் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது.

இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜீத்குமாரை காண ஆவலுடன் திரண்டனர். தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 9மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அப்போது பிக்பாஸ் புகழ் மற்றும் திரைப்பட நடிகை யாஷிகாஆனந்த் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

No posts to display