Thursday, June 8, 2023 4:03 am

முற்றிலுமாக சளி இருமலில் இருந்து விடுபட ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
- Advertisement -

பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

மழைக்காலம் துவங்கிவிட்டாலே, சளி, இருமல் போன்ற பிரச்சனை நம்மை பாடாய் படுத்த துவங்கிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.

இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம்.

எனவே, நாம் இந்த பதிவில் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
தூதுவளை இலை – 2 கப்
புதினா – 1 கப்

பூண்டு – 4 பல்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

புளி – சின்ன எலுமிச்சை அளவு

துருவிய தேங்காய் – 2 டீஸ்புன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – 1/2 துண்டு

சிறிய வெங்காயம் – 10

சிவப்பு காய்ந்த மிளகாய் – 6

கடுகு -1 டீஸ்பூன்

பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், உரித்து வைத்த சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.

பின்பு அதனுடன் துருவிய தேங்காய் பூவை போட்டு வதக்கவும்.இறுதியாக அதனுடன் தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி 5 நிமிடம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு சின்ன கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த துவையலில் ஊற்றவும்.

சட்டினியாக வேண்டும் என்றால் தண்ணீர் கலக்கி கொள்ளலாம். இப்போது சுவையான, சளி, இருமலுக்கு உகந்த தூதுவளை துவையல் ரெடி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்