அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் !!

0
அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் !!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், வீரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

ஏகே 61 படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் தயாராகும் மூன்றாவது படம் தான் ஏகே 61. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் அஜித் கடந்த மாதம் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சில நாட்கள் பைக் ட்ரிப் சென்ற இவர், பல்வேறு இடங்களை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்று சுற்றிப்பார்த்தார். சுமார் ஒரு மாத சுற்றுலாவுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார் அஜித்.

சென்னையில் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, ஏகே 61 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் செல்ல இன்று விமான நிலையம் வந்த அஜித், அங்கு காரில் வந்திறங்கியதும், அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு கைகொடுத்ததோடு மட்டுமின்றி அவர்களை பார்த்து சல்யூட்டும் அடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ச்ச என்ன மனுஷன்யா என வியந்து பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

No posts to display