வாரிசு திரைப்படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு முழுக்கு போடும் இயக்குனர் வம்சி !! ரசிகர்கள் அதிர்ச்சி

0
வாரிசு திரைப்படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு முழுக்கு  போடும் இயக்குனர் வம்சி !! ரசிகர்கள் அதிர்ச்சி

திரையுலகில் முன்னணி இயக்குனராக கொடி கட்டி பறந்த இயக்குனர் எடுத்த திடீர் முடிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் வேறு யாரும் அல்ல விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வம்சி தான். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வம்சி வாரிசு திரைப்படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறாராம். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அவர் நிறைய பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும், அதனால் வெளிநாடுகளில் வேறு தொழிலில் கவனம் செலுத்த போவதாகவும் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இப்படி பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருப்பதால் வம்சி இந்த விஷயம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது மக்களுக்கு சினிமா மீதான ஆர்வம் கம்மியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்களின் ரசனை மாறிவிட்டது என்றும், அதனால் தான் நான் படங்களை இயக்குவதை நிறுத்தப் போகிறேன் என்றும் அவர் பேட்டி கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தற்போது சங்கடத்தில் இருக்கின்றனர். விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இவர் இனிமேல் இயக்க மாட்டேன் என்று கூறியிருப்பது திரையுலகில் சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அவருடைய இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. ரசிகர்களின் இந்த கோரிக்கையை வம்சி ஏற்பாரா என்று வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தெரிந்து கொள்ளலாம்.

No posts to display