படித்த புத்தகத்துடன் ஸ்ரீமதியின் உடல் தகனம் !! கண்ணீரில் மக்கள் !! வைரலாகும் புகைப்படம்

0
படித்த  புத்தகத்துடன்  ஸ்ரீமதியின் உடல் தகனம் !! கண்ணீரில் மக்கள் !! வைரலாகும் புகைப்படம்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச் சடங்குகள் செய்து அவரது உடலை இன்று தகனம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஜூலை 13ம் தேதி பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த பள்ளி மாணவியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக சனிக்கிழமை காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனது.

இந்நிலையில் இரண்டு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் மூழ்க ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீமதியின் உடலைப் பார்த்து பெற்றோர்களின் கதறல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கண்கலங்க வைத்துள்ளது. இறுதியாக Biology-Zoology புத்தகத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

No posts to display