Tuesday, April 16, 2024 9:15 pm

சிம்பு ஹன்ஷிகா நடித்த ‘மஹா’ படம் பார்க்க சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி! அடப்பாவமே கதறும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான ‘மஹா’ இன்று ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா, சிம்பு, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, மஹத் ராகவேந்திரா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா வித்தியாசமான பரிமாணத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவரது படங்கள் பெரியளவில் பேசப்படாத நிலையில், ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ‘மஹா’ திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ‘மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் ரிலீஸாகும் படமாக ‘மஹா’ அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று படம் வெளியாகிய முதல் நாளே மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மற்றும் சிம்பு ரசிகர்கள் அவருக்காக படம் பார்க்க வந்து ஏமாந்து போனதாக சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மோசமான திரைக்கதை காரணமாக படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்