சிவி 2 படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

0
சிவி  2 படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ் மற்றும் தாடி பாலாஜி, கோதண்டம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சிவி 2”. இப்படத்தை செந்தில்நாதன் இயக்கியிருக்கிறார். துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் நாளை(ஜூலை 22) வெளியாக இருக்கிறது.

விஷுவல் கம்யூனிகேசன் படிக்கும் மாணவர்கள் சிலரை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுக்க வருகின்றனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்குகிறார் இன்ஸ்பெக்டர்.

காவல்துறை விசாரிக்க ஆரம்பித்ததும், அவர்களுக்கு சில வீடியோ கேமராக்கள் கையில் சிக்குகிறது. இந்த வீடியோ கேமராக்களை அவ்வப்போது அண்டர் கவர் ஆப்ரேஷன் செய்து வரும் சாம்ஸிடம் கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.

அந்த வீடியோ கேமராவில் என்ன இருக்கிறது என்பது ஒவ்வொன்றாக பார்க்கிறார் சாம்ஸ். அந்த வீடியோவில் தொடர்ச்சியாக பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை பார்க்கிறார்.

பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும், அமானுஷ்ய சக்தி உலாவும் என கூறும் ஒரு பாழடைந்த மருத்துவமனைக்குள் மாணவ, மாணவியர் 9 பேர் செல்கின்றனர். யார் அவர்களை அந்த மருத்துவமனைக்குள் அனுப்பியது.? அந்த பாழடைந்த மருத்துவமனைக்குள் என்ன இருந்தது.? மாணவர்களுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த கதாபாத்திரம் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக நடித்து, அக்கதாபாத்திரத்தோடு ஒன்றிருக்கின்றனர். கிருஷ்ணா கதாபாத்திரத்தில் தோன்றிய யோகியாக இருக்கட்டும், க்ரிஷ் கதாபாத்திரத்தில் தோன்றிய தேஜ் ஆக இருக்கட்டும், கதையோடு பயணம் செய்திருக்கின்றனர்.

சாம்ஸ் இதில் தனியாக நிற்கிறார். தனது அனுபவ நடிப்பை இதில் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

முதல் பாதில் சற்று விறுவிறுப்பு குறைவு என்றாலும், இரண்டாம் பாதியில் நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.

அதிர்ச்சியான காட்சிகள் பல இருந்தாலும், ஆங்காங்கே வேறு வேறு இடத்திற்கு சம்பந்தம் இல்லாமல் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது சற்று எரிச்சலடைய வைத்துவிட்டது. விறுவிறுப்பான காட்சி நகர்வில், திரைக்கதையும் பயணப்பட்டிருந்தால் இன்னும் ஜோராக இருந்திருக்கும்.

சஞ்சய் அவர்களின் ஒளிப்பதிவு, மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனித்துவமாக கொடுத்திருக்கிறார். ஃபைசல் அவர்களின் இசையில், பின்னணி இசை கவனிக்கத்தக்கது.

இருந்தாலும், பேய் படங்களை ரசிக்க்கும் அனைவரும் நிச்சயம் ஒருமுறை பார்க்கும் படமாக அமைந்திருக்கிறது இந்த “சிவி 2”.

No posts to display