10 கெட்டப்புகளில் நடித்த பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

0
10 கெட்டப்புகளில் நடித்த  பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்துள்ள ‘பஹீரா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.பின்னணி நடனக் கலைஞராக இருந்து பின்னர் நடன இயக்குனராக மாறி அதையடுத்து நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட கலைஞராக உருவெடுத்திருக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவா தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவா 10-க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

பஹீரா டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. தற்போது ‘பஹீரா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி பஹீரா திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No posts to display