
Maha Movie review ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான ‘மஹா’ ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. ‘மஹா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், மேலும் அதிலிருந்து வரும் கவர்ச்சியான வசனங்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார், மேலும் படத்தை தமிழகத்தில் 400 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘மஹா’ குழந்தை துஷ்பிரயோகத்தை மையமாகக் கொண்டது, மேலும் இந்த படம் ஹன்சிகா மோத்வானியின் 50 வது படத்தை குறிக்கிறது. அழகான நடிகை ஒரு வலுவான பாத்திரத்தில் காணப்படுவார், இது நிச்சயமாக ஒரு கண்ணைக் கவரும். ஸ்ரீகாந்த் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் இப்படத்தில் கருங்கரன், தம்பி ராமையா, குழந்தை மானஸ்வி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘மஹா’ படம், ஹன்சிகா மோத்வானியின் 50வது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா. இப்படத்தில் ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே அப்படத்தின் படப்பிடிப்பு பணியில் முடிந்து பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறா இயக்குநர். இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஹன்சிகா மற்றும் சிம்பு வரும் காட்சிகள், அவர்களின் ரொமான்ஸ் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டி இருக்கிறார். மஹா படத்துக்கு இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து படத்தில் உள்ளது. குடும்பத்தோடு அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
சிம்பு படத்தில் 40நிமிடம் வருவார என்று சொன்னாங்க, அதனால், ரொம்ப ஆர்வத்தோடு வந்தோம். ஆனால்,படம் ஆரம்பிக்கும் போது ஒரு 10 பத்து நிமிஷம் வருகிறார். மறுபடியும், ஒரு பிளாஸ் பேக்கில் வருகிறார் அது ஏமாற்றமாக இருந்தது. மேலும், சிம்பு என்டரி சீனும் சரியாக இல்லை கடைசியில் அவருக்கு என்ன ஆச்சுனும் சொல்ல வில்லை. இதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் என்று சிம்புவின் தீவிர ரசிகர்கள் வருத்தத்துடன் கூறினர்.