Saturday, April 20, 2024 12:39 am

நிகழும் ஆடி முதல் வெள்ளியில் அடிக்கும் அதிர்ஷ்டம் !! இதுல உங்க ராசி இருக்கா !!

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆடி மாதம் அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகும். இம்மாதத்தில் அம்மானை வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில் சில ராசிக்காரர்கள் விரும்பிய பலனை பெறுவார்கள்.

இன்று ஆடி வெள்ளி. அதன்படி சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்களுக்கு அம்மனின் ஆடி வெள்ளி சிறப்பு வாய்ந்தது.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, தமிழில் ஆடி மாதம் என்பது, கடக ராசியில் சூரியனின் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் ஆகும். ஆடி மாதம் அம்மனுக்கு மிகுந்த விசேஷமான பூஜைகள் செய்யப்படுவது உண்டு.

அதன்படி இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்க சிறப்பாக இருக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

தற்போது சனி பகவான் மகர ராசியில் பிற்போக்கு நிலையில் அமர்ந்துள்ளார். மகரம், கும்பம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சரித்திருப்பதால் ஏழரை நாட்டு சனி நடக்கிறது.

அதேசமயம் மிதுனம் மற்றும் துலாம் ராசியில் சனி தசையின் தாக்கம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு ஆடி முதல் வெள்ளி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரிஷபம்
உங்களின் துறையில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.

மிதுனம்
பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும்.

கன்னி
பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும். மரியாதை, பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.

துலாம்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும். அரசு வேலையை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல நேரம். இந்த நேரத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மீனம்
இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல நேரம். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்