வாரிசு படத்தில் தளபதி விஜய் சாப்ட்வேர் டெவலப்பரா வாரிசு படத்தின் லேட்டஸ்அப்டேட் இதோ !

0
வாரிசு படத்தில் தளபதி விஜய் சாப்ட்வேர் டெவலப்பரா வாரிசு படத்தின் லேட்டஸ்அப்டேட் இதோ !

வாரிசு படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் இப்போது இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டேக்லைன் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது லார்கோ வின்ச் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கலாம் என்று சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிதான் இந்த படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் வெளிநாட்டில் வசிக்கும் ஆப் டெவலப்பராக நடிக்கிறாராம். மேலும் அவரின் கதாபாத்திரத்துக்கு ‘விஜய் ராஜேந்திரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No posts to display