அஜித்திற்கு போன் செய்தாரா பிரம்மாண்ட இயக்குனர் !! மிரளும் கோலிவுட் வெளிவரும் உண்மை.!

0
அஜித்திற்கு போன் செய்தாரா   பிரம்மாண்ட இயக்குனர்  !!  மிரளும் கோலிவுட் வெளிவரும் உண்மை.!

‘ஏகே 61′ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார். தற்போது, ​​’ஏகே 61’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தெலுங்கு நடிகர் அஜய் நடிகர்களுடன் இணைந்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் சில இரக்கமற்ற வில்லன் வேடங்களில் நடித்துள்ள அஜய், ‘ஏகே 61’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குழுவுடன் இணைவார், இது புனேவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இன்று (20.07.2022) மதியம் வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. வெளிவட்ட சாலையில் இயக்குனர் எச்.வினோத் படக்காட்சிகளை இயக்கி வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சங்கர் முதல்வன் 2 படத்திற்கான கதையை தயார் செய்து வைத்துவிட்டார், இப்பொழுது சங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்க இருக்கிறதாம்.

முதல்வன் 2 படத்தில் தளபதி விஜய் தான் நடிக்க இருக்கிறார் என்று பல வதந்திகளும் பரவியது. இந்த நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் செய்தி என்னவென்றால் முதல்வன் 2 படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் தல அஜித்திடம் கூறியுள்ளாராம். தல அஜித்துக்கும் முதல்வன் 2 படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது.

இப்போது தல அஜித் வினோத் இயக்கத்தில் தல 61 படத்தில் நடிக்க இருப்பதால் தல அஜித் ஷங்கரிடம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருப்பதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக முதல்வன் 2 படம்படமாகத்தான் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் தல அஜித் சமூக அக்கறை கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனால் ஷங்கரின் முதல்வன் 2 படத்தில் தல அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வெளியாகி இருக்கும் இந்த தகவலை கேட்டு உடனே சில தல ரசிகர்கள் முதல்வன் 2 என்ற டைட்டிலில் தல அஜித்தின் போட்டோவை வைத்து செம மாஸாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயார் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சரி, ஷங்கரின் முதல்வன் 2 படத்தில் தல அஜித் நடித்தால் மிரட்டலாக இருக்குமா இருக்காதா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

No posts to display