நான் மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் கோலிக்கு சரியாக இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

0
நான் மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் கோலிக்கு சரியாக இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான்.

இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது நடந்து முடிந்த தொடர்களில் கூட அவர் சரிவர விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கோஹ்லி குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் கோலியைகு அதிக போட்டிகளில் விளையாட வைப்பேன். அவர் இப்போது விளையாடும் இடத்திலேயே தொடர்ந்து விளையாட வைப்பேன். அப்போது அவருக்கு நம்பிக்கை அதிகமாகி மீண்டும் ஃபார்முக்கு வருவார்” என்று கூறியுள்ளார்.

No posts to display