அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தின் டிரைலர் இதோ !

0
அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’  படத்தின் டிரைலர் இதோ !

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்க்குரிய நிலையில், வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் ‘லைகர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அந்தவகையில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடும் குஷியில் உள்ளனர். அதிரடியுடன் கூடிய குத்து சண்டை திரைப்படமான இந்த படம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் அனன்யா பாண்டே நாயகியாகவும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display