நடக்கும் 2022 இல் பூமிக்கு வரும் ஆபத்து? பாபா வாங்காவின் ஷாக்கிங் கணிப்பு !!

0
நடக்கும் 2022 இல் பூமிக்கு வரும் ஆபத்து? பாபா வாங்காவின் ஷாக்கிங் கணிப்பு !!

உலகில் பல தீர்க்கத்தரசிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசி பாபா வாங்கா.

இவருக்கு பார்வை தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவதில் வல்லவர்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருப்பதை கணித்து குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

இவரது கணிப்புகளுள் பல இதுவரை நடந்துள்ளன.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் நிகழும் 6 நிகழ்வுகளை கணித்து கூறியிருந்தார்.

அதில், 2 கணிப்புகள் கிட்டத்தட்ட நடந்துவிட்டன. இன்னும் 4 கணிப்புகள் உள்ளன. அவை என்னவென்பதை விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே போர்ச்சுகல், இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் மக்களிடம் நீரை குறைவாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

ஏனெனில் 1950-களுக்குப் பிறகு இந்த நாடுகளில் மிகக்குறைந்த அளவில் மழை பெய்து வருகிறது. இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.

அடுத்து 2022 ஆம் ஆண்டில் ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார். அதோடு நிலநடுக்கம் ஏற்படும் என்றும், சுனாமி ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

இவர் கூறியது போன்றே, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. மேலும் பங்களாதேஷ், இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தாய்லாந்திலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதைப் பார்க்கும் போது பாபா வாங்காவின் கணிப்புகளுள் மற்றொன்றும் நடந்துவிட்டது நன்கு தெரிகிறது.

2022 ஆம் ஆண்டில் சைபீரியாவில் கொடிய வைரஸ் ஒன்று கண்டறியப்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார். மேலும் பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி இந்த வைரஸ் பரவும்.

அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையான 50 டிகிரி செல்சியஸை எட்டுவதோடு, பயிர்கள் மற்றும் வயல்களை வெட்டுக்கிளிகள் தாக்கும் என்றும், அதனால் நாட்டில் பட்டினி கிடக்கும் வாய்ப்புள்ளது என்றும் பாபா வாங்கா கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகள் ‘ஓமுவாமுவா’ என்ற சிறுகோள் மூலம் பூமிக்கு வந்து, பூமியில் உள்ள மக்களைத் தாக்கக்கூடும் என்று பாபா வாங்கா தனது கணிப்புகளில் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உலகில் மக்கள் கேஜெட்டுகளுக்கு முன் அதிக நேரத்தை செலவிடுவார்கள் என்று பாபா வாங்கா தனது கணிப்பில் கூறியிருந்தார். இந்த மாதிரியான போக்கால் மக்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No posts to display