விரைவில் நித்யா மேனனுக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!!

0
விரைவில் நித்யா மேனனுக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!!

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படத்தில் தொடங்கிய நித்யா மேனன். 17 வயதில் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் ஒரு கன்னடப் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும் தமிழில் 180 படத்திலும் என்னை அறிமுகம் செய்து கொண்டார்.

தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நித்யா மேனன் துல்கர் சர்மா இணைந்து நடித்த ஓ காதல் கண்மணி படத்தை எளிதில் யாரும் மறந்திட முடியாது. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருக்கும் இந்த படத்திலிருந்து நித்யா மேனனுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது.

முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்திருந்தாலும் பிற்பகுதியில் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இரண்டாவது கதாநாயகியாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தனக்குத் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார்.

தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆறாம் திருகல்பனா படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. ஹைதராபாத் மார்டன் லவ் என்ற அந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதையடுத்து அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் பரவி வெளியாகியுள்ளன.நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No posts to display