பீஸ்ட் படத்தால் எங்கு போனாலும் நமக்கு ஏழரைதான்..! நொந்து கொள்ளும் ‘பீஸ்ட்’ நெல்சன்.!

0
பீஸ்ட் படத்தால் எங்கு போனாலும் நமக்கு ஏழரைதான்..! நொந்து கொள்ளும் ‘பீஸ்ட்’ நெல்சன்.!

தற்போது வரும் இயக்குனர்கள் ஒரு இளம் ஹீரோவை வைத்து ஒரு பெரிய வெற்றியை கொடுத்ததும், அடுத்த படமே பெரிய பெரிய நடிகர்களை வைத்து இயக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த திரைப்படமும் ஹிட் கொடுத்தால், அடுத்தடுத்து வாய்ப்புகள் எந்தவித சலனமும் இன்றி லோகேஷ் கனகராஜ் போல வந்து குவிந்து கொள்கிறது. அதுவே தோல்வி அடைந்து விட்டால், நெல்சன் போல ஒவ்வொரு விஷயத்திற்கும் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்படுகிறது.

தளபதி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் காரணமாக அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கும் ஜெயிலர் படத்திற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் எழுந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.

கதை ரஜினி கூறிய ஒரு வரி கதை. அதனை மெருகேற்றி நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் பட்ஜெட் விஷயத்தில் மிகவும் கறார் காட்டுகிறது தயாரிப்பு நிறுவனம், என்ற தடைகள் எல்லாம் உடைத்து எறிந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி சூட்டிங் கிளம்பலாம் என்று நெல்சன் இருக்கையில்,

ஆனால், தற்போது ஆந்திராவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பித்து உள்ளனர் சினிமாக்காரர்கள். அதுவும் தொழிலாளர்கள். இவர்கள் இல்லாமல் படத்தை எடுப்பது சிரமம்.

ஆதலால், உள்ளூர் சினிமாவே அந்த சமயம் அங்கு ஆட்டம் கண்டுவிடும். இந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று அங்கு எப்படி இவர் படபிடிப்பை நடத்த போகிறார் என்று தெரியவில்லை. இதை கேட்டு எங்கு போனாலும் நெல்சனுக்கு ஏழரைதான் போல என்று ரசிகர்கள் நொந்து கொள்கிறார்கள்.

No posts to display