ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்த நடிகை தான் இந்த சீரியல் பிரபலமா !! நீங்களே பாருங்க

0
ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்த நடிகை தான் இந்த சீரியல் பிரபலமா !! நீங்களே பாருங்க

பொதுவாக சீரியலில் நடிக்கும் பல சீரியல் நடிகைகள் பெரும்பாலும் தொலைக் காட்சியில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் முதலில் வெள்ளித்திரையில் நடித்து வரும் பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் சின்னத்திரையில் நடித்து வருவார்கள். அப்படி தான் இங்கு ஏராளமான நடிகைகள் பட வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடித்து வருகிறார்கள்.

அதிலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்த பல நடிகைகள் சீரியலில் நடித்து வருகிறார்கள் அப்படி பட வாய்ப்பு இல்லாததால் சீரியலுக்கு சென்ற முன்னாள் நடிகைதான் நடிகை ஸ்வேதா பண்டிட் இவர் தற்போது சன் தொலைக் காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இவர் சென்னையில் தன்னுடைய படிப்பை முடித்தவர் இவர் முதன்முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார் பின்பு தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் 2007ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய ஆழ்வார் என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்கு 2008ஆம் ஆண்டு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த திரைப்படமான வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்கியவர் மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாரதி என்பவர் தான். இவர் நடித்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சினிமா துறையில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார் அதன் பிறகு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 9 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய பூலோகம் என்ற திரைப்படத்திலும் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஸ்வேதா அவர்களுக்கு சினிமா வாழ்க்கை கை கொடுக்கவில்லை என்றாலும் சீரியல் மிகவும் கை கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவர் சிந்தால் சோப், உதய கிருஷ்ணா நெய் என பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மகள் என்ற தொடரில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தார்.

இவர் ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார் தற்பொழுதுஇவரின்லேட்டஸ்ட்புகைப்படம்வைரளாகிவருகிறது.

No posts to display