மீண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா ? புகைப்படம் வைரல்

0
மீண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா ? புகைப்படம் வைரல்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் ஊகித்து வரும் நிலையில் அவர் தலைப்புச் செய்தியாகி வருகிறார்.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் பிறந்தார்.

தற்போதும் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெள்யாகிறது.

1950களில் தொடராக வெளிவந்த அதே பெயரில் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் நாவலின் சினிமா தழுவல்தான் ‘பொன்னியின் செல்வன்-பாகம் 1’. 2010-ல் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘ராவணன்’ படத்திற்குப் பிறகு தென்னக நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாவின் இரண்டாவது கூட்டணி இது, 1997 இல் ‘இருவர்’, 2007 இல் ‘குரு’ மற்றும் 2010 இல் ‘ராவன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்துடன் நான்காவது கூட்டணியைக் குறிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் பல பாகங்களாக வெளியாகவுள்ளது.

No posts to display