பிரபல இளம் நடிகையுடன் டேட்டிங்! பிளேபாய் அவதாரம் எடுத்த நடிகர் சித்தார்த்

0
பிரபல இளம் நடிகையுடன் டேட்டிங்! பிளேபாய் அவதாரம் எடுத்த நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் சித்தார். படங்களை தவிர்த்து சமுக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சித்தார்த், வாய்ப்புகள் இல்லை என்றால் சினிமாவையே வேண்டாம் என்று சென்றுவிடுவேன் என்று கூறியிருந்தார். தற்போது மஹா சமுத்திரம் என்ற படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் நடித்திருந்தார்.

இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் மகளின் திருமணத்திற்கு ஜோடியாகவும் கலந்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் சித்தார்த் பிறந்த நாளுக்கு அதிதி வாழ்த்துக்கூறி காதலை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் உலா வருகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு சலூனில் இருந்து நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் வெளியில் ஒன்றாக வருவதை பத்திரிக்கையாளர்கள் முதன்முதலாக பார்த்துள்ளனர். போட்டோவுக்கு போஸ் கொடுத்துச்சென்ற அதிதி காரில் ஏறி இருந்தார்.

அவரை தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் வெளியே வந்தார். போட்டோ எடுப்பவர்களை எடுக்க வேண்டாம் என்று கூறி அதிதி ஏறிய காரிலேயே ஏறி சென்றுள்ளராம். தற்போது அவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

No posts to display