பணத்திற்கு ஆசைப்பட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டை எடுத்த பெண்… அடுத்த நொடியே உயிருக்கு போராடிய பரிதாபம்!

0
பணத்திற்கு ஆசைப்பட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டை எடுத்த பெண்… அடுத்த நொடியே உயிருக்கு போராடிய பரிதாபம்!

கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டை எடுத்த இளம் பெண் ஒருவர் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, ரென்னே பார்சன் என்ற பெண் சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, இயற்கை உபாதைக்காக செல்லும் போது வாசலில் ஒரு டாலர் நோட்டு இருப்பத்தை கண்டுள்ளார் அந்த பெண்.

உடனே கையில் எடுக்கையில், அதன்பிறகு அவருக்கு திடீரென உடல் மறுத்துபோய் ஆரம்பித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட அவரது கணவர் மனைவி பார்சனை தொட்டதும் அவருக்கும் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை உடனே சுதாரித்துக்கொண்ட கணவர் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். பின் மருத்துவமனைக்கு சென்ற பின் பார்சனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

சில மணி நேர சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராகியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில், கீழே கிடந்த ஒரு நோட்டை எடுத்தவுடன் எனது உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன்.

உடனே எனது தோள்பட்டைகள் இறங்குவது போல் இருந்தது. கைகள் மரத்துப்போனது, விழித்திருக்க போராடினேன் என்னை தொட்ட கணவருக்கும் இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

நல்லவேளையாக நான் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவர்கள் கூறுகையில், அந்த டோலர் நோட்டில் ஃபெண்டானில் என்ற மருந்து தடவப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், பொதுவாக அறுவை சிகிச்சையின் போது, நோயாளிக்கு இந்த மருந்து அளிக்கப்படும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகச்சிறிய அளவு கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் இது ஆபத்தான போதைப்பொருளாக மாறிவிடும் என எச்சரித்திருக்கிறார்கள்.

இதனிடையே, அமெரிக்காவில் டாலரை எடுத்து இளம் பெண் உயிருக்கு போராடிய நிலையில், அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

No posts to display