எனக்குன்னு எதுவும் வேண்டாம் !! ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் ஹாப்பி யான விக்கி !!

0
எனக்குன்னு எதுவும் வேண்டாம் !! ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் ஹாப்பி யான விக்கி !!

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக வலிமை சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே அது வைரலானது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், அஜித் நடிக்க இருக்கும் 62-வது படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருகிறார் என்றும், அந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் தன்னை சமாதானப்படுத்தும் விதமாக காட்சிகள் எதையும் அமைக்க வேண்டாம் என்றும் ரசிகர்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக படம் இருந்தால் போதும் எனவும் அஜித், விக்னேஷ் சிவனுக்கு ஆலோசனை கூறியுள்ளாராம்.

இதைக் கேட்ட விக்னேஷ் சிவன் இப்போது முழு சுதந்திரத்தோடு திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது

No posts to display