தன்னை அறிமுகப் படுத்திய இயக்குனரையே பதம் பார்த்த சிவகார்த்திகேயன்… இவரா இப்படி ரசிகர்கள் அதிர்ச்சி

0
தன்னை அறிமுகப் படுத்திய இயக்குனரையே பதம் பார்த்த சிவகார்த்திகேயன்… இவரா  இப்படி ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது அயலான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடைய மெரினா படத்தின் மூலம் நடிகராக்கினார் இயக்குனர் பாண்டிராஜ்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் பணியாற்றினர். இந்த இரண்டு படங்களும் ஹிட் படங்களாக அமைந்தன.

இடையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்போது தன் படத்தின் இயக்குனரை முடிவு செய்யும் இடத்தில் அவர் இருக்கிறார்.

இதனால் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்றவாறு கதைகள் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்கிறார்.

இப்போது மாவீரன் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் ‘எதற்கும் துணிந்தவன்’ தோல்விக்குப் பிறகு ஒரு கதையோடு சிவகார்த்திகேயனை அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது தான் பிஸியாக இருப்பதாக சொல்லி அவரை நைஸாக கைகழுவி விட்டாராம் சிவகார்த்திகேயன். இதனால் தற்போது சிவகார்த்திகேயன் மேல் அதிருப்தியில் இருக்கிறாராம் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர். சினிமாவுல இதெல்லாம் சகஜம்தான பாஸ்.

No posts to display