பட வாய்ப்புக்காக நிர்வாணமா நடிக்கவும் ரெடி… சீரியல் நடிகை கூறிய தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

0
பட வாய்ப்புக்காக நிர்வாணமா நடிக்கவும் ரெடி… சீரியல் நடிகை கூறிய தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். இவர் சின்னத்திரையில் மாத்திரமன்றி வெள்ளித்திரையிலும் ஆக்டிவாக உள்ளார்.

இவர் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்திருந்தார் ரேகா நாயர்.

மேலும் இதில் ராணி என்ற கதாப்பாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளாரே என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் இரவின் நிழல் படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரேகா நாயர், போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என கூறியுள்ளார்.

ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை உருவாக்க பட்ட சிரமங்களையெல்லாம் பகிர்ந்து கொண்ட ரேகா நாயர், தான் மேலாடையின்றி நடித்தது குறித்தும் பல வியடங்களை பகிர்ந்தார். அதில் என் உடம்பு… என் மனசு… என் உடம்பை நான் ஓவியமாக பார்க்கிறேன், சிற்பமாக பார்க்கிறேன். கலையை நேசிப்பவர்களுக்கு அது தெரியாது.

தவறாக பேசுபவர்கள் செய்பவர்கள் கமெண்ட் செய்யட்டும். அவர்கள் எனக்கு தேவையானதை செய்வார்களா? பார்த்திபன் போன்ற இயக்குநரிடம் என் திறமையை காட்டாமல் வேறு யாருக்கு காட்டப்போகிறேன். எனக்கு பிச்சைக்காரி, விபச்சாரி போன்ற விரக்தியான கேரக்டரில் நடிக்க அதிக விருப்பம்.

அத்தோடு மேக்கப் போட்டு ஹீரோயினியாக நடிக்க விருப்பமில்லை. அதற்காக மொத்தமாக கழட்டி காட்டுவார் என்று நினைத்தால் அது நடக்காது. நல்ல கதையாக இருக்க வேண்டும் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிப்பேன். பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இப்படி நடித்ததால்தான் கொண்டாடுகிறார்கள். அக்காவாக, அண்ணியாக, தோழியாக நடித்த போதெல்லாம் கண்டுகொள்ளவில்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

No posts to display