நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் பிரபல நடிகருடன் அப்படியொரு நெருக்கம்! நடிகை சமந்தா வீடியோவால் சர்ச்சை..

0
நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் பிரபல நடிகருடன் அப்படியொரு நெருக்கம்! நடிகை சமந்தா வீடியோவால் சர்ச்சை..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா விண்ணத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார். பல படங்களில் ஜோடியாக நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்த சமந்தா காதலித்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் போல்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சமந்தா 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு பிரிந்தார். அதன்பின் சுதந்திர பறவையாக ஐட்டம் குத்தாட்டம், படுமோசமான போட்டோஷூட் என்று தன்னுடைய மார்க்கெட்டை ஏற்ற பல வேலைகளை செய்தார்.

தற்போது சகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்களில் நடித்து வரும் சமந்தா, பாலிவுட்டில் கலம் இறங்கவுள்ளார். வெப் தொடர்களில் நடித்தும் வந்த சமந்தா ஆரம்பத்தில் அக்‌ஷய் குமாருடன் ஜோடி போடவுள்ளார். இதற்கு சமீபத்தில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகர் நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமாருடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி குறித்த சில வீடியோக்கள் கரண் ஜோகர் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது சமந்தாவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. நிகழ்ச்சிக்கு வருகை தரும் அக்‌ஷய், சமந்தாவை தூக்கியபடி ரொமான்ஸ் செய்து வந்துள்ளார்.

மேலும் அவருடன் நெருக்கமாக கட்டியணைத்து நடனமாடியும் இருக்கிறார். இப்படி சமந்தா பிரபல நடிகருடன் ரொமாண்டிக் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

No posts to display