நான் ரெடி அஜித் ரெடியா பார்த்திபன் கூறிய உண்மை இதோ !!!

0
நான் ரெடி அஜித் ரெடியா பார்த்திபன் கூறிய உண்மை இதோ !!!

‘இரவின் நிழல்’ 90 நிமிடங்கள் ஓடக்கூடியது, இதில் ஆர் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத், பிரிஜிதா சாகா, சினேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு மற்றும் ரேகா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், அவரது இசை படத்தை மேலும் தீவிரமாக்குகிறது.

இந்த படம் குறித்து பார்த்திபன் பேட்டி அளித்தார். அது வருமாறு: ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படத்தில் நான் மட்டும் நடித்தேன். தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்தது. இதே படத்தை அபிஷேக் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறேன். அடுத்து இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. ஜூலை 15ம் தேதி ‘இரவின் நிழல்’ படம் திரைக்கு வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இரவின் நிழல்’ திரையிடப்பட்டபோது, பல ஹாலிவுட் கலைஞர்கள் பார்த்து பாராட்டினார்கள். இதனால் இந்த படமும் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில், அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அஜித் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை.

இதனையடுத்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அஜித் குறித்து முன்னதாக பேசிய வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது . அஜித் குறித்து அவர் கூறியது ” ஜோக்கர் மாதிரி ஒரு படத்தில் அஜித் சார் நடித்தால் பின்னிவிடுவார். அப்படி ஒரு நடிப்பு அவர் கிட்ட இருக்கும். ஜோக்கர் படத்தில் அவரை வில்லனு சொல்லுவிங்களா..? ஹீரோன்னு சொல்லுவிங்ளா.? அந்த மாதிரி ஒரு ரோல் அஜித் சார் பண்ண தியேட்டர் தெறிக்கும்” என கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் என்னை விட அஜித்திற்கு சிறந்த வில்லன் அஜித் தான் என அவரது ஸ்டைலில் கூறியுள்ளார்.

பார்த்திபனின் இந்த பேட்டி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

No posts to display