தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தில் கிடைத்த மீரா 90ஸ் கிட்ஸ்களிடம் நீங்கா இடம் பிடித்து பாலா, புதிய கீதை, அஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பின் சண்டக்கோழி, ஆயுத எழுத்து, திருமகன், நேபாளி போன்ற படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் தகராறு காரணமாக விவாகரத்து வரை சென்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் தரப்பில் கூறப்பட்டது.
39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திரும்பவும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். உடல் எடையை குண்டான காரணத்தால் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மீரா ஜாஸ்மின் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை குறைத்தார்.
தற்போது 40 வயதான நிலையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆடைகளை அணிந்து ரசிகர்களை மிரட்டி வருகிறார். இறுக்கமான ஆடையில் மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.