பாலிவுட்க்கு தாவும் லோகேஷ்… ஹீரோ யார் தெரியுமா ? வைரலாகும் தகவல் இதோ !!

0
பாலிவுட்க்கு தாவும் லோகேஷ்… ஹீரோ யார் தெரியுமா ? வைரலாகும் தகவல் இதோ !!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் பாலிவுட் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார்.

கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு உலக நாயகன் கமலை வைத்து ‘விக்ரம்’ சமீபத்தில் இயக்கினார். இந்த படம் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக மாறிவிட்டது. இந்த படத்திற்கு லோகேஷின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துவிட்டது.


தற்போது விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாலிவுட் படம் லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். மிரட்டலான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது.

சமீபகாலமாக தமிழ் இயக்குனர்களுக்கு பிறமொழிகளில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட் பிரபு ஆகியோர் தெலுங்கில் முன்னணி நடிகர்களை வைத்து புதிய படங்களை இயக்கி வருகின்றனர். அதேபோன்று அட்லி, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை பாலிவுட்டில் இயக்கி வருகிறார். இயக்குனர் ஷங்கர் விரைவில் பாலிவுட்டில் ‘அந்தியன்’ ரீமேக் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display