Thursday, June 13, 2024 4:10 am

இணையத்தில் படு வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் !! அதுக்கு பின்னால் உள்ள உண்மை இது தான்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் இணைந்து பணியாற்றினார். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் தற்போது ஐரோப்பாவில் ரோட் ட்ரிப் செய்து மகிழ்ந்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித்.இந்த படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட மவுண்ட் ரோடு போன்ற செட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷுட்டிங் நடந்தது. அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக ஏகே 61 டீம் புனே செல்ல உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அஜித், திடீரென கிளம்பி ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்று விட்டார்.

அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அஜித் பைக்கில் சுற்றுவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது, ரசிகர் டி ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடுவது, ஷாப்பிங் போவது என அஜித்தின் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தற்போது அதே போன்றதொரு வீடியோ மற்றும் போட்டோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி உள்ளது. #AK61 என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்டானதால் அஜித் பற்றி இப்போ என்ன லேட்டஸ்ட் அப்டேட் வந்திருக்கு என அனைவரும் ஆர்வமாக பார்த்தால், அஜித் வழக்கம் போல் கோட் சூட், வெள்ளை தாடியுடன் வந்து நிற்கும் போட்டோ ஒன்று தீயாய் பரவி வருகிறது.

அதுவும் அஜித்துடன் இரண்டு பெண்கள் வேறு இந்த போட்டோவில் உள்ளனர். ஒரு பெண் அஜித் பக்கத்தில் அடக்கமாக நடந்து வருகிறார். ஆனால் அஜித்தோ தனக்கு எதிராக நிற்கும் பெண்ணிடம் அடக்கமாக கையை காட்டியபடி நிற்கிறார். என்ன நடக்கிறது இங்க…யாரு இந்த பொண்ணுங்க…அஜித் ஏன் இவ்வளவு அடக்கமாக நிற்கிறார் என ரசிகர்கள் குழப்பமடைந்து கேள்விகளை அடுக்க துவங்கினர்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. அஜித் தற்போது வரை லண்டனில் தான் உள்ளார்.அங்கு தான் தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது எதிரே வந்த பெண் அஜித்தை அடையாளம் கண்டுபிடித்து, அவருடன் கை குலுக்குகிறார். அஜித்தும் மரியாதையாக கை குலுக்கி விட்டு, அந்த பெண்ணை உள்ளே செல்ல அடக்கமாக கையை காட்டி உள்ளார். அஜித் உடன் நடந்து வரும் பெண் அவரின் உதவியாளர் என சொல்லப்படுகிறது.

இந்த போட்டோ தான் அஜித் ரசிகர்கள் தற்போது டிரெண்டாகி வருகிறார்கள். சமீபத்தில் கூட அஜித் லண்டனில் ஷாப்பிங் சென்ற போது எதிரே வந்த பெண்ணிற்கு வழிவிட்டு, விலகி நின்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இதை அஜித் ரசிகர்கள், அஜித்தின் புதுப்பட ரேஞ்சில் கொண்டாடினர்.

ஐரோப்பா ட்ரிப்பை முடித்து கொண்டு அஜித் இந்த வாரம் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்ததும் புனேவிலும்,அதைத் தொடர்ந்து வடசென்னையிலும் ஏகே 61 ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட உள்ளதாம்.

ஏகே 61 வேலைகளை முடித்து விட்டு அஜித், விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஏகே 62 படத்திற்காக தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்