போடு தகிட தகிட மீண்டும் சமூக பிரச்சனையை கையில் எடுக்கும் அஜித் !! மிரளும் திரையுலகம் !!

0
போடு தகிட தகிட மீண்டும் சமூக பிரச்சனையை கையில் எடுக்கும் அஜித் !! மிரளும் திரையுலகம் !!

ஏகே 62 படத்தின் கதை மற்றும் படத்தில் அஜித்தின் ரோல் பற்றிய அசத்தல் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். படத்தை எப்போது ஆரம்பிக்க போகிறார்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் வழக்கமாக ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கமிட் ஆவார். சினிமாவிற்கு வந்தது முதல் கைபிடித்து வரும் இந்த பழக்கத்தை அஜித் சமீபத்தில் மாற்றிக் கொண்டுள்ளார்.

ஏகே 61 படத்தின் ஷுட்டிங் முடிவடைவதற்கு முன்பாகவே அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி விட்டது. ஏகே 62 படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 62 படத்தில் அஜித், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ரோலில் நடிக்கிறாராம். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த அஜித், நல்ல மனம் கொண்டவராக இருக்கிறார். அவர் ஊரில் உள்ள அனைவருக்கும் தரமான உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்து உணவு விநியோக பிசினஸ் ஒன்றை துவங்குகிறார். இந்த பிசினஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், தமிழகம் முழுவதும் பல கிளைகளை துவக்கி, வெற்றிகரமாக பிசினஸ் நடத்தி வருகிறார்.

ஆனால் அஜித்தின் வளர்ச்சியை பிடிக்காத வில்லன்கள், சதி செய்து ஒரே இரவில் அஜித்தின் பிசினஸ் முழுவதையும் இழுத்து மூட வைக்கிறார்கள். பெரிய பணக்காரராக இருந்த அஜித், ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலைக்கு வந்து விடுகிறார். வில்லன்களின் சதிகளை முறியடித்து, எப்படி அவர் தனது பிசினசை மீட்டெடுக்கிறார், பழைய நிலைக்கு வருகிறார் என்பது தான் படத்தின் கதையாம்

விமர்சனம் சொல்வதை போல் படத்தின் ஒட்டுமொத்த கதையும் வெளியாகி விட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் கதை, படத்தில் நடிப்பவர்கள் என அனைத்தையும் அனைவரும் ரகசியமாக வைத்து வரும் சமயத்தில், அஜித் நடிக்க போகும் படத்தின் கதை முழுவதையும் எப்படி வெளியே விட்டார்கள் என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். நிஜமாகவே விக்னேஷ் சிவன் இந்த கதையை தான் தயார் செய்திருக்கிறாரா அல்லது இந்த கதையும் கற்பனையானதா என பலரும் கேட்டு வருகின்றனர்.

No posts to display