பணத்திற்க்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

0
பணத்திற்க்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பிணத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலையரசன் உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருப்பதை கண்ட பெற்றோர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையம் சென்று தன் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ ஆர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணன், கலையரசனின் தந்தை, தாய் புஷ்பா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் கொடுத்த புகாரில் 45 நாட்கள் ஆகியும் கலையரசன் மர்மமான முறையில் இருந்ததையும் இது குறித்து போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பணத்திற்காக சிலர் கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் எனவும் கூறியிருந்தார்கள். எனவே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No posts to display