மருமகள் மாமனார் இடையே நடந்த குடும்ப தகராறில் அந்தரங்க பகுதியில் உதைத்த மருமகள் – பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0
மருமகள் மாமனார் இடையே நடந்த குடும்ப தகராறில் அந்தரங்க பகுதியில் உதைத்த மருமகள் – பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா.

இவரது மருமகள் சந்தோஷ். நிலத்தகராறு காரணமாக மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் அண்மையில் நடைப்பெற்றுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மருமகள் மாமனாரை அடிக்க பாய்ந்துள்ளார். பின் அங்கிருந்த குடும்பத்தினர்கள் சமாதானம் செய்ய மீண்டும் வாய் வார்த்தை போராக மாறவே அவரை அடிக்க முற்படும் போது மாமியார் கைகளை பிடித்துக்கொள்ள, கால்களால் மாமனாரின் அந்தரங்க பகுதியில் பலமுறை எட்டி உதைத்து இருக்கிறார் மருமகள்.

இதனால் வலியால் துடித்து சரிந்த மாமனாரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அங்கும் சென்றும் வலியால் துடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மறு நாளே அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது சம்பந்தமான வீடியோ காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No posts to display