ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது

0
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர்.

ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 24 ஜூலை 2022 அன்று முடிவடைகிறது. இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க சுமார் 4,800 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள்.

வாக்களிக்க அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்:

தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் வாக்களிக்க தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை கமிட்டி ஹாலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் வாக்கு பெட்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு விமானம் மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்து, ஓட்டுப்பதிவுக்கு பின், ஓட்டு பெட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டு, இன்று இரவு, சென்னையில் இருந்து, விமானம் மூலம், டில்லிக்கு பாதுகாப்புடன், ஓட்டுப்பெட்டி அனுப்பி வைக்கப்படும்.

உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 21 காலை டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு நமது நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார்.

No posts to display