‘நானே வருவேன்’ படத்தால் தனுஷ் – செல்வராகவன் இடையே நடந்த உச்சகட்ட மோதல் !!!

0
‘நானே வருவேன்’ படத்தால் தனுஷ் – செல்வராகவன் இடையே நடந்த   உச்சகட்ட மோதல் !!!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று முழுப் படத்தையும் தனுஷ் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

படத்தைப் பார்த்த தனுஷ் இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தின் கதை தனுஷ் எழுதியது என்பதால் அவர் நினைத்த மாதிரி படம் வரவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக படப்பிடிப்பின் போதும் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.

No posts to display