முதல் முறையாக AK 61 படத்தில் வில்லன் பற்றி வெளியான மாஸ் அப்டேட் இதோ !!!

0
முதல் முறையாக  AK  61 படத்தில் வில்லன் பற்றி வெளியான மாஸ் அப்டேட் இதோ !!!

‘ஏகே 61’ என்ற தற்காலிகப் படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.

அஜித்தின் ஏ.கே. 61 படத்தில் தெலுங்கில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த நடிகர் இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.

வலிமை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். பெயர் இன்னும் இந்த படத்திற்கு முடிவு செய்யப்படவில்லை. ஏ.கே. 61 என்ற பெயரில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜித் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடித்துக் கொடுத்தார். பின்னர் இங்கிலாந்தில் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், தெலுங்கில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த அஜய், ஏ.கே. 61 படத்தில் இடம்பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை ஏ.கே. 61 படத்தில் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், வீரா மற்றும் அஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொள்ள, ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித் தற்போது லண்டனில் இருப்பதால் அவர் இடம்பெறாத மற்ற காட்சிகளை எச். வினோத் படமாக்கி வருகிறார். அந்த வகையில் வடசென்னை பகுதியில் ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இறுதிக் கட்டமாக படப்பிடிப்பு புனேவில் நடைபெறவுள்ளது. இந்த ஷெடூலுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புனேவில் நடைபெறவுள்ள படப்பிடிப்பின்போது அஜித் வேறு விதமான கெட்அப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழலில் படத்தின் வெளியீடு இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No posts to display