தனது மாஜி கணவரின் காதலில் எழுந்த சர்ச்சை! சமந்தா அந்த பக்கமே தலைக்காட்டாமல் இருக்க இதுதான் காரணமா?

0
தனது மாஜி கணவரின் காதலில் எழுந்த சர்ச்சை! சமந்தா அந்த பக்கமே தலைக்காட்டாமல் இருக்க இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ல் கல்யாணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதன்பின் படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா சமுகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஷூட் உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன் சமந்தாவின் மாஜி கணவர் நாகசைதன்யாவும் நடிகை ஷோபிதா துலிப்பல்லாவும் ரகசிய காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை சமந்தா தான் சிலரை வைத்து இப்படியான பொய் வதந்திகளை வெளியிட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தனர். இதற்கு சமந்தா தன் பங்கிற்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவினை போட்டிருந்தார். இதன்பின் ஒருசில போட்டோஷூட்களை வெளியிட்ட சமந்தா 10 நாட்களுக்கும் மேலும் சமுகவலைத்தள பக்கத்தில் வரவேயில்லை.

சர்ச்சையில் சிக்கியப்பின் அந்த பக்கமே தலைக்காட்டாமல் இருந்து வந்ததற்கு காரணமே பாலிவுட் பேட்டி தானாம். பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்ட சமந்தா உங்களின் படமும் இரு காரணம் என் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி கொடுக்காதற்கு என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் விரையில் ஹாட்ஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக கூட சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடாமல் விலகி வருகிறார். கிட்டத்தட்ட 24 மில்லியன் பாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சமந்தா இன்ஸ்டாகிராம் சமீபத்தில் மர்ம நபர் ஒருபரின் புகைப்படத்தோடு ஒரு பதிவு வெளியாகி ஹாக் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவரது மேனேஜர், தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம்பெற்றது என்று கூறியுள்ளார். தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No posts to display