உறங்கும் போதே பிரிந்த உயிர்! மனைவி கொடுத்த கடைசி முத்தம்: இறுதிச்சடங்கிலும் வித்தியாசம்

0
உறங்கும் போதே பிரிந்த உயிர்! மனைவி கொடுத்த கடைசி முத்தம்: இறுதிச்சடங்கிலும் வித்தியாசம்

மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் ஆசைபடி அவரது இறுதி சடங்கும் வித்தியாசமாகவே நடைபெற்றுள்ளது.

நடிகர் பிரதாப் போத்தன்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரதாப் போத்தன்(69), கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை காலமானார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரதாப், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்திரிக்காததால் அவரது சமையல்காரர் காஃபியுடன் அறைக்கு சென்றுள்ளார்

அப்பொழுது அவர் சுயநினைவு இல்லாமல் உறக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

ராதிகாவை முதல் திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரதாப் போத்தன், 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து பெற்றார். இவர்களுக்க கேயா போத்தன் என்கிற மகளும் உள்ளார்.

பிரதாப்பின் இறுதி சடங்கிற்கு வந்த மனைவி மற்றும் மகள் பிரதாப்பை பார்த்து கதறி அழுதனர். கடைசியாக கணவருக்கு ஆசை முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார் அவரது மனைவி அமலா.

இந்நிலையில் இன்று பிரதாப் போத்தனின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்து, இந்து முறைப்படி உடலை தகனம் செய்துள்ளனர். மிகவும் வித்தியாசமான அனைவருக்கும் பிடித்த மனிதரான பிரதாப்பின் இறுதி சடங்கும் வித்தியாசமாகவே நடந்துள்ளது.

நடிகர் பிரதாப் போத்தன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது இறப்பிற்கு பின்பு தகனம் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளதால் தற்போது அவரது ஆசையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.

No posts to display