திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகிய நடிகை காஜல் அகர்வால்? பிகினியில் எப்படி இருக்கார் தெரியுமா

0
திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகிய நடிகை காஜல் அகர்வால்? பிகினியில் எப்படி இருக்கார் தெரியுமா

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்து பின் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

முன்னணி நடிகை
நான் மகான் அல்ல படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து அதன்பின் சூர்யாவின் மாற்றான், விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் போன்ற படங்களிலும் மாரி, விவேகம், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வந்தார். இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பல ஆண்டுகளாக காதலித்து வந்த கெளதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்
திருமணத்திற்கு முன்பு இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இருந்த காஜல் அதன்பின் படத்தில் இருந்து விலகினார். அதற்கு காரணம் அப்போது கர்ப்பமாக இருந்ததால் படங்களில் நடிக்க முடியாது என்று கூறியிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி காஜலுக்கும் கெளதமுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து வாய்ப்புகள் வந்து உதறித்தள்ளும் காஜல் விளம்பரப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

குண்டான காஜல்
சினிமாவில் இதற்கு மேல் நடிப்பாரா என்ற கேள்வி எழும் நிலையில் தற்போது குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். முகம் வீக்கத்துடன் சமீபத்தில் ஒரு விளம்பர வீடியோவையும் வெளியிட்டார். மேலும் நீச்சல் குளத்தில் பிகினி ஆடையில் உட்கார்ந்த படி எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

No posts to display