எச்.வினோத் இயக்கிய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: வைரலாகும் புகைப்படம் ரசிகர்கள் உற்சாகம்!

0
எச்.வினோத் இயக்கிய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:  வைரலாகும் புகைப்படம் ரசிகர்கள் உற்சாகம்!

எச் வினோத் இயக்கிய ’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ‘வலிமை’ மற்றும் ’ஏகே 61’ ஆகிய மூன்று படங்களை இயக்கி உள்ளவர் எச்.வினோத். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவானது என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன போதிலும் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் கதை வசனத்தில் நிர்மல் குமார் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர்.


இந்த நிலையில் ’சதுரங்க வேட்டை 2’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 7 என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

No posts to display