அடப்பாவமே இதுக்கு தான் இவ்வளவு பில்டப்-ஆ? அங்க போனதுக்கு தனுஷுக்கு இத்தனை கோடி சம்பளம் கிடைச்சதாம்

0
அடப்பாவமே இதுக்கு தான் இவ்வளவு பில்டப்-ஆ? அங்க போனதுக்கு தனுஷுக்கு இத்தனை கோடி சம்பளம் கிடைச்சதாம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர், தி கிரே மேன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.

ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டு வருகிறார்.

வரும் ஜூலை 22 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் நடித்த நட்சத்திரங்களில் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

200 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்த Ryan Gosling 10 மில்லியன் டாலர், Chris Evans 15 மில்லியன் டாலர், Ana de Armas 4 லட்சம் டாலர், Jessica Henwick 3 லட்சம் டாலர், Regé-Jean Page 150 லட்சம் டாலர், Wagner Moura 150 லட்சம் டாலர் வாங்கியுள்ளார்கள்.

அதில் நடிகர் தனுஷுக்கு 5 லட்சம் டாலர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 3 கோடியே 99 லட்சமாம். இந்திய திரைப்படங்களில் 20 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்று வந்த தனுஷ் ஹாலிவுட் படத்தில் வெறும் 4 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நட்சத்திரங்கள் பாலிவுட் போவதே பெரிய விசயம். அப்படி இருக்கையில் தனுஷ் ஹாலிவுட்டில் கலம் கண்டு இருப்பது பணத்தை தாண்டி மதிப்பும் மரியதையும் கிடைத்தது அதுவே போதும் என்று தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

No posts to display